Kataragama Pada Yatra in Yala 2015
 
Vel, Murugan's weaponKataragama Devotees Trust logo in English, Sinhala and Tamil

நீண்ட காலத்திற்குப் பின்னர் கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை வெள்ளி காலை சந்நிதியிலிருந்து புறப்பாடு

Pada Yatra pilgrims set out from Selva Sannidhi Kovil, Jaffna.
Pada Yatra pilgrims at Ushan Kandaswamy Kovil, Jaffna
Pada Yatra pilgrims at Ushan Kandaswamy Kovil, Jaffna
Pada Yatra pilgrims walking through Kilinochchi District
Pada Yatra pilgrims walking through Kilinochchi District

Uthayan (Jaffna) article of May 20, 2004

மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வடபகுதியிலிருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்குப் பாத யாத்திரை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து நாளை ஆரம்பமாகும். இந்தப்பாத யாத்திரையில் 30 முதல் 35 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடைபெறும் காலைப்பூசையினை அடுத்து ஜேர்மனியைச் சேர்ந்த பற்றிக் கரிகரன் சுவாமிகள் தலைமையில் இந்தப்பாத யாத்திரை நடைபெறவுள்ளது.

இப்பாதயாத்திரையில் செல்வதற்காக 30 முதல் 35 வரையான அடியார்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அடி யார்ளும் அடங்குவர்.

நாளை செல்வச்சந்நிதியில் இருந்து ஆரம்பிக்கும் இப்பாதயாத்திரை முதலில் ஆவரங்காலிலுள்ள சிவன் கோவிலைச் சென்றடையும். அதனையடுத்து மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும்.

தொடர்ந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆல யத்தினைச் சென்றடையும் புல்மோட்டை மூதூர் பொத்துவில் ஏறாவூர்மற்றும் வடக்குக்கிழக்கின் பல பகுதிகள10டாகவும் செல்லும் இப்பாதயாத்திரை கதிர்காமத்தைச் சென்றடைய சுமார் மூன்று மாதங்கள் செல்லும் என அறிய வருகிறது.

கதிர்காமத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவத்திற்கு முன்னர் இப்பாத யாத்திரை அடியார்கள் கதிர்காம முருகன் ஆலயத்தைச் சென்றடைந்து விடுவர்.


2004 Pada Yatra pilgrims reach Trincomalee