![]() |
||||||
| ||||||
![]() ![]() 2011 கதிர்காம ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை
வடக்கிலிருந்து கதிர்காம ஆலயத்தை நோக்கிய சமாதான பாதயாத்திரையொன்றை பக்தர்கள் ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் மே 7ஆம் திகதி தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்த பாதயாத்திரை ஏ9 பாதையூடாக மாங்குளம், முல்லைத்தீவு வழியாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து இறுதியாக கதிர்காம ஆலயத்தை சென்றடையவுள்ளது.. சுமார் 29 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலினால்தான் இவ்வாறு நீண்டதூரம் பாதையாத்திரை மேற்கொள்ள முடிந்துள்ளதாக பாதயாத்திரைக் குழுவின் தலைவர் எஸ்.தேவராசன் தெரிவித்தார். குறித்த பாதயாத்திரை குழுவினர் இன்று காலை மட்டக்களப்பு ஆரையம்பதி கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். Courtesy: The Tamil Mirror of 8 June, 2011 |
|
Living Heritage Trust ©2023 All Rights Reserved |