![]() |
||||||||||||
| ||||||||||||
![]() ![]() ˜ ‚ ˆ Š தேசிய தொலை நோக்கை உருவாக்கக் கதிர்காம பாத யாத்திரிகர்களின் பங்களிப்பு
கதிர்காமக் கந்தனின் கொடியேற்ற விழா வந்துவிட்டது. கிழக்குக் கடற்கரையோரமாக முல்லைத்தீவில் இருந்து கதிர்காமம் வரை நூற்றுக் கணக்கான பாத யாத்திரிகர்களின் பக்திப் பரவசமான "அரோகரா! அரோகரா!!" āன்ற பேரொலி வானத்தைத் தொடுகின்றது. கிராம மக்கள் மனதில் சமாதானம் தொடர்ந்து நிலவும் āன்ற தளராத நம்பிக்கை இடம்பெற்றுள்ளது. அதனால் பாத யாத்திரிகர்களின் āண்ணிக்கை இவ்வாண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் புனித தலமான கதிர்காமத்தைச் சென்று சேர இரண்டு மாதங்கள் வரை செல்லும். அடியார்களுக்கு அன்னதானம் வழங்க வழி āல்லாம் āதிர்பார்த்து நிற்கும் கிராம மக்களின் பக்திப் பரவசத்தை āவ்வாறு āடுத்துரைப்பது. 50, 60, 70 வயதுள்ள அடியார்கள்; சிலர் 90 வயதைத் தாண்டிய அடியார்கள். அவர்களுக்கு அன்னதானம் வழங்கி உபசரிப்பதில் கிராம மக்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். மாவட்டங்கள் ஊடாக பாத யாத்திரிகர்கள் செல்லும் போது, கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் பலர் பாத யாத்திரையில் கலந்துகொள்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் பாத யாத்திரிகர்களின் āண்ணிக்கை பெருகிக் கொண்டே போகின்றது. யூலை மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ள கொடியேற்ற விழாவிற்கு இன்āம் இரண்டு வாரங்கள் தான் இருக்கின்றன. அதற்கு முன்னரே மட்டக்கிளப்பை விட்டுப் புறப்படு முன்னர், சில குழுக்களில் 300 க்கும் அதிகமான பாத யாத்திரிகர்கள் இடம்பெற்றுள்ளனர். "மரபுவழியான பாத யாத்திரை āதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு அன்று; சமாதான யாத்திரையும் அன்று. உள்ளத்திலும் உடலிலும் பக்திப் பரவச உணர்வை வளர்த்து, நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இன்னருள் சொரிந்து, உலகத்தை வாழ வைப்பதற்கே" āன்று கதிர்காம யாத்திரை அடியார்கள் நம்பிக்கை அமைப்பின் பேச்சாளர் திரு சந்திரசேகரா கூறுகின்றார். "கதிர்காமக் கந்தன் இன்று பலராலும் போற்றி வழிபடும் இறைவன். ஏனெனில் அப்பெருமான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்; மக்கள் āல்லோரையும் ஒரு குலமாகக் கண்டு அருள் பாலிப்பவன். அரசியல் பிளவுகள் யாவற்றையும் கடந்தவன். சமயங் கடந்த பெருமான்; மக்களின் கண்கண்ட தெய்வம்" āன்று அவர் மேலும் கூறுகின்றார். தேசிய தொலை நோக்குதேசிய வளத்தையும் உறுதிப்பாட்டையும் தன்னகத்தே கொண்ட, பல்வேறுபட்ட பண்பாடுகளையும், பல்லின மக்களையும், பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும், பல சமுதாயத்தினரையும் கொண்ட சமாதானமும் பெருவளமும் மிக்க இலங்கையை உருவாக்குவதற்கான வீதிப் படவரை ஒன்றை அமைப்பதே தேசிய தொலை நோக்காகும். முல்லைத்தீவில் இருந்து கதிர்காமம் வரை இவ்வாண்டு நீண்ட கதிர்காமப் பாத யாத்திரையை மேற்கொள்ளும் அடியார்கள் கிராம மக்களின் சொந்தப் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதாக இருக்கும். திறந்த உள்ளத்தோடு கலந்துரையாடல்களை ஊக்குவித்து, கிராம மக்களின் உள்ளக்கிடக்கைகளை அறிந்து முடிவுகளைக் கருத்துக்கு āடுக்கவும் ஒன்றிணைக்கவும் தேசியத் தொலை நோக்குக் குழுவிற்கு அāப்பி வைப்பர்.
"கிராமத்துக்குக் கிராமம் வேறுபடும் கிராம மக்களின் கருத்துகளை ஒன்று சேர்த்து உதவுகின்ற கதிர்காமப் பாத யாத்திரை அடியார்கள் நாட்டிற்குத் தலைசிறந்த அரிய சேவையைச் செய்கின்றனர்" āன்று தேசியத் தொலை நோக்குக் குழுவின் தலைவர், கலாநிதி தேவநேசன் நேசையா கூறுகின்றார். பாத யாத்திரை நேர்காண்போரில் ஆண்களும் பெண்களும் உளர். பாத யாத்திரிகர்களில் நேர்காணும் ஆண்கள், கிராமத்திலுள்ள ஆண்களையே நேர்காண்கின்றனர்; பெண்கள் கிராமப் பெண்களை நேர்காண்கின்றனர். இந்தத் திட்டத்தில் தமிழ்ப் பேசும் தொண்டர்களும் சிங்களம் பேசும் தொண்டர்களும் இருக்கின்றனர். இவர்கள் கிழக்குக் கரையோரத்தில் வாழ்கின்ற இந்துக்கள், புத்தர்கள், கிறித்தவர்கள், முஸ்லீங்கள் ஆகியவர்களை நேர்காண்கின்றனர். கரையோர வேடர்கள்கரையோரத்தில் வாழ்கின்ற தமிழ்ப் பேசும் வேடர்களின் கருத்துக்களும் முதல் முதலில் கொழும்பு மாநகரில் கேட்கப் போகின்றது. வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள கிராமக்களில் தமிழ்ப் பேசும் மக்களே வாழ்கின்றனர். āனிāம் சேருவில போன்ற சிங்களவர் வாழும் இடங்கிலும் மதிப்பீடுகள் āடுக்கப்படுகின்றன. அங்கு வாழும் சிங்கள மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு தமது அயலவர்களான தமிழ் மக்களோடும் முஸ்லீங்களோடும் சமாதானமாக வாழவே விரும்புகின்றனர். "கிராமத்தோர் உள்ளக் கிடக்கைகளும் கேட்கட்டும்" āன்ற முன்னோடித் திட்டம் முல்லைத்தீவு, திருக்கோணமலை, மட்டைக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெற்ற தகவல் அறிக்கைகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளது. இப்போது அம்பாறை மாவட்டத்தில் நேர்காணல்களைத் தொடங்கியுள்ளது. யூலை மாதம் இரண்டாம் வாரத்தில் 500 அடியார்கள் - அவர்களுள் அதிகமானோர் வயது முதிர்ந்த கிராமத்தவர்கள் - மட்டக்களப்பு மாவட்டத்தைக் கடந்துள்ளனர். பொத்துவிலைச் சென்று சேரும் போது இவர்களின் āண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் āன்று āதிர்பார்க்கப்படுகிறது. பொத்துவிலில் இருந்து யாத்திரையைத் தொடங்க முன்னர், பொத்துவிலில் இவர்கள் ஒன்றுகூடுவர். யாழ தேசியப் பூங்காவின் ஊடாக வாரம் முழுவதும் பாத யாத்திரையை மேற்கொள்வதற்கு வேண்டிய உணவுகளைப் பொத்துவிலில் வாங்குவர். மரபு முறையிலான கதிர்காம யாத்திரையை மீளமைத்து ஆதரிக்கக் கதிர்காம அடியார்கள் நம்பிக்கைப் பொறுப்பைத் தாபித்த பின்னர், 1983 ஆம் ஆண்டில் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை கதிர்காம யாத்திரை இனப் பிரச்சினைகளின் மத்தியிலேயே நடந்தது. தேசிய, மாவட்ட, உள்ளூராட்சி மட்டங்களில் கிராம மக்கள், அலுவலர்கள் ஆகியோரின் ஆதரவுடன் கதிர்காம அடியார்கள் நம்பிக்கைப் பொறுப்பினால் இவ்வாண்டு நடத்தப்படும் கதிர்காம யாத்திரை பதினாறாவது பாத யாத்திரை ஆகும். Full text of this article in original English |
|
Living Heritage Trust ©2023 All Rights Reserved |